இராஜாங்க அமைச்சரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவிப்பு ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்-

பதுளை நகரில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் பதுளை நகர வர்த்தகர்களினால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது

இவ் ஆர்ப்பாட்டம் பதுளை மாகாண சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் நடைபவணியாக பதுளை வைத்தியசாலை வரை சென்று மீண்டும் பதுளை நகர் வரை வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பதுளை நகரில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது.

மேலும், பதுளை மாகாண சபைக்கு முன்பாக அண்மையில் அமைச்சு பதவியை பொறுப்பேற்ற ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.