ரஷ்ய ஜனாதிபதி சீனா பயணம்
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கு பயணிக்கவுள்ளார்.
ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ரஷ்ய ஜனாதிபதியின் விஜயத்தை சீன வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்