ரஷ்யாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதம் குறைந்து, நாளொன்றுக்கு சுமார் 21 இலட்சம் பீப்பாய்களாக பதிவாகியுள்ளது. வர்த்தகத் தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இந்த அளவு மேலும் குறைந்து சுமார் 19 இலட்சம் பீப்பாய்களாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ரஷ்யா தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாக உள்ளது. ஆகஸ்டில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறைந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியா அதிகளவில் எண்ணெய் கொள்வனவு செய்துள்ளது. ஈராக்கிலிருந்து இறக்குமதி சுமார் 25 சதவீதம் அதிகரித்து நாளொன்றுக்கு 171,000 பீப்பாய்களாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, அமெரிக்கா ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான மாற்று எண்ணெய் விநியோகங்களை சர்வதேச சந்தையில் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியும் 8.8 சதவீதம் குறைந்து, நாளொன்றுக்கு 44.4 இலட்சம் பீப்பாய்களாக பதிவாகியுள்ளது.









