
ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான ரயில்
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையுடன் மோதி ரயில் ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரயில் பணியாளர்கள் உரிய இடத்தில் ரயிலை நிறுத்த தவறியமையினால், குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ரயில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 அளவில் சிலாபம் நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
