ரயில் நிலையத்திற்குள் தாக்குதல்
ரயில் நிலையத்திற்குள் தாக்குதல்
பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் மதுபானம் அருந்திய குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த குழவினர் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், புகையிரத நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்