
ரயிலுடன் மோதிய கார்: சுற்றுலா பயணி உட்பட இருவர் காயம்
கடுகதி ரயிலில் இன்று செவ்வாய் கிழமை கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயிலுடன் கார் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் செல்வதற்கான சமிக்ஞை போடப்பட்டிருந்த நிலையில், கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
