ரயிலில் மோதி யுவதி மரணம்

-பதுளை நிருபர்-

எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலில் மோதி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 109, முள்ளரராவ, கிடலெல்ல எல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்திலேயே குறித்த யுவதி மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியின் சடலம் தெமோதர புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்