ரயிலில் இருந்து தவறி விழுந்து வெளிநாட்டு பெண் காயம்

-பதுளை நிருபர்-

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து நேற்று ஞாயிற்று கிழமை தவறி விழுந்து வெளிநாட்டு பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரிஷியஸ் குடியரசைச் சேர்ந்த மேரி கோரலே (வயது – 32) என்ற பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

நேற்று பகல் 2:20 மணியளவில் பட்டிப்பொல மற்றும் ஓஹியா இடையே ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் காயமடைந்து ரயிலில் ஹப்புத்தளைக்கு ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 1990 அம்புலன்ஸ் சேவை மூலம் தியத்தலாவை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்