ரயிலில் மோதி 9 வயது சிறுவன் பலி

மொரட்டுவை பகுதியில் ரயிலில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர் .ரந்தரு (வயது – 9) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முரவத்த ரயில் கடவைக்கு அருகில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்