ரணில் இன்று கைது செய்யப்படுவார் என யூடியூப்பருக்கு எப்படி தெரியும்? – சாமர சம்பத் தசநாயக்க கேள்வி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவது குறித்து, நடிகரும் யூடியூபருமான சுதத்த திலகசிறிக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த தசநாயக்க, ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுவார் என்று திலகசிறி கூறிய காணொளியை பற்றி கேள்வி எழுப்பினார்.

ரணில் விக்ரமசிங்க ஒரு அறிக்கையை பதிவு செய்வதற்கு முன்பு, கைது செய்யப்படுவார் என சுதத்த திலகசிறி குறிப்பிட்டதாகவும், நீதிபதி முடிவு செய்வதற்கு முன்பு ‘யூடியூப் சுதா’ தீர்ப்பை வழங்குகின்றமை நகைச்சுவையாக இருக்கிறது, என சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.