ரஜினிகாந்துக்கு 300 கிலோகிராம் எடையில் தனி கருங்கல்லில் சிலை வைத்த ரசிகர்!
இந்தியா தமிழ்நாட்டின்-மதுரையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 300 கிலோகிராம் எடையில் தனி கருங்கல்லில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இரசிகரொருவர் மதுரை- திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோவிலில் இந்த சிலையை ஸ்தாபித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளும் செய்யப்பட்டுள்ளது.