
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத முறையில் ஈட்டப்பட்ட சொத்து தொடர்பான குற்றச்சாட்டில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ்மா அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்