யேமனின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மூகா (Mokha) செங்கடல் துறைமுக நகரத்தை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி ஆதரவு அரசுப் படைகள் அங்கிருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து ஹூத்திகள் நகரைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூகா துறைமுகம் பாப் அல்-மண்டப் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ளதால், இந்தக் கைப்பற்றல் சர்வதேச கடல் வர்த்தகம் மற்றும் எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இந்த நீரிணை உலகளாவிய வர்த்தகத்தின் சுமார் 10–12 சதவீதத்துடன் தொடர்புடைய முக்கிய கடல்வழியாகும்.
ஹூத்திகளின் முன்னேற்றத்தையடுத்து யேமனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதுடன், செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது.










