
-யாழ் நிருபர்-
யாழ். மானிப்பாயில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத வாள்வெட்டு குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தெலிப்பாளையைச் சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் (வயது -21) என்பவரே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ் .போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையத்தில் இருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நெறுக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


