யாழ். நல்லூரில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – ஐவர் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு ஒரு குழுவினர் இன்னொருவர் குழுவினர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு குழுவினருக்கு இடையேயான முரண்பாட்டினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடாத்திய ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.