யாழ். சிறைச்சாலை கைதியின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது
யாழ் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் சமரச பேச்சுக்களை அடுத்து அதனை கைவிட்டுள்ளார்.
குற்றசெயல்களில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலையில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் அது இன்று ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்