யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த பெருவிழா

யாழ் வரலாற்று சிறப்பு மிக்க குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா திருச்சுருவப்பவனி நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கடந்த 17 ஆம் திகதி நவநாளின் வருடாந்த கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வருடாந்த திருவிழாவில் 25 ஆம் திகதி திருச்சுருவபவனி இடம்பெற்றது.

நாட்டின் பலபாகங்களில் இருந்து கிறிஸ்தவ மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.