யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.சுபசிங்க தலைமையிலான குழு கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

கைது நடவடிக்கையின் போது 765 கிராம் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைக்காக சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.