யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர்களால் குழப்ப நிலை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன  மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில்  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இரு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஐந்து வாகனங்களில் வருகை தந்திருந்தனர்.

திரும்பிச் செல்வதற்காக  வாகனத்திற்கு  யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தபோது அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர்.

இதன்போது எரிபொருளிற்காக காத்திருந்த வாகன உரிமையாளர்கள்,

“உங்களாலதானேடா நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல் கொலை காரரிற்கு முழுமையாக கேட்குது. அடிக்க முடியாது” என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதன்போது சம்பவத்தை செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரின் உதவியாளர் படம்பிடித்து அச்சுறுத்தியதோடு மக்களிடம் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்டு அரை மணி நேரத்தின் பின்பு 11 ஆயிரத்து 200 ரூபாவிற்கு டீசலை நிரப்பி வெளியேறினர்.

இதன்போது மக்கள் “இவங்களாள வாழவும் முடியவில்லை, நிம்மதியாக சாகவும் முடியவில்லை, அதேநேரம் எரிபொருளும் இல்லை மின்சாரமும் இல்லாத நேரத்தில் 50 சதத்திற்கு பிரியோசணம் இல்லாமல் கொழும்பில் இருந்து யழ்ப்பாணம் வருகின்றனர், என தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24