யாழ்ப்பாணத்தில் பிரபல மிருதங்க வித்துவான் காலமானார்

-யாழ் நிருபர்-

பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று புதன் கிழமை தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார்.

தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே மாதம் 2 ம் திகதி பிறந்தார். இவர் மிருதங்க வித்துவானாக பல்வேறு கலை சார் பணிகளை முன்னெடுத்திருந்தார்.

குறிப்பாக யுத்த காலம் முதல் இன்று வரை அறநெறி சார் கல்வி வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்