யாழில் 5 பேர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு துறைமுகத்திற்கு அருகில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலை இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன்,  சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இனந்தெரியாத சிலர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட 5 பேரில் இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மற்ற மூவரில் ஒருவர் தொழிலதிபர் எனவும் தெரவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு பெண் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்