யாழில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் 18 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அவற்றை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்