யாழில் வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று சனிக்கிழமை இரவு  நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வேனும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்