
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – 5 சந்தி பகுதியில் 3000 போதை மாத்திரைகளுடன், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போதை மாத்திரைகளின் பெறுமதி 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும பொலீனிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
