யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியை சேர்ந்த சாந்தினி (வயது – 63) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததுடன், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்டதையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்