
-யாழ் நிருபர்-
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது, வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு, அதற்குள் பனை ஓலைகள் போடப்பட்டு, அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பதை அவதானிக்க முடிகிறது.
இச்செயலானது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
