யாழில் ஐவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் – UPDATE

நெடுந்தீவில் இடம்பெற்ற வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 100 வயதான மூதாட்டியின் உடல்நிலை தேறி வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூதாட்டியின் முகப்பகுதியில் வெட்டு காயமும் கீழ்த் தாடை எண்புடைவும் ஏற்பட்டுள்ளது இதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் ஒருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்