யாழில் இரவில் நடந்த அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்