யாழில் இடம்பெற்ற பயங்கரம்: சகோதரர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அச்செழு பகுதியை சேர்ந்த 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இரு வேறுபட்ட தரப்பினரிடையே ஏற்பட்ட முறன்பாடு காரணமாக குறித்த வீட்டில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.

காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்