யாழில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒழிந்து இருந்து காணொளி எடுத்த இருவர்

நாடு முழுவதும் அரசின் முறையற்ற ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நேற்று யாழ். பல்கலை வாயிலில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றடைந்தது.

இதன்போது அந்த அலுவலகத்தின் நுழைவாயில் திடீரென மூடப்பட்டது.

அத்துடன் அலுவலக கட்டடத்தின் மேல் மாடியில் நின்ற இருவர் பதுங்கியிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை படம்பிடித்தனர்.

இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தண்ணீர் போத்தல்களை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள காட்சிப்பலகை மேல் வீசியமை குறிப்பிடத்தக்கது.