யார் இந்த கேணல் சாண்டர்ஸ்?

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவண்டு போனவனாக தான் இருப்பான். ஆனால் இங்கு நாம் பார்க்க போகும் நபர் 1009 தடவைகள் தோல்விகளை தழுவியும் தனது விடாமுயற்சியால் முன்னேறியவர். இன்று அதிகமானவர்கள் விரும்பி உண்ணும் துரித உணவில் KFC எனும் மிகப் பெரிய வர்த்தக நாமத்தை கட்டியெழுப்பியவர்.

கேணல் சாண்டர்ஸ் என்பவர் சிறு வயதில் பல தோல்விகளை சந்தித்தவர். 1890 ல் பிறந்தார். அவருக்கு 5 வயது இருக்கும்போது அவரது தந்தை இறந்துவிட்டார். 12 வயது இருக்கும்போது அவரது தாயார் மறுமணம் செய்துகொண்டார். இதனால் அவரது மாமா வீட்டில் வளர்ந்தார். 15 வயது இருக்கும்போது இராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் கழுதையை கையாளுபவராக இருந்தார். வெறும் 4 மாதங்களுக்கு பிறகு வேலையை விட்டு வீடு திரும்பினார்.

அவர் முதல் பாதி வாழ்க்கையானது ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலை என மாறி மாறி செய்தார். நீராவி இரயில் இயந்திரத்தில் எரிபொருள் நிரப்புதல், காப்பீடு விற்பனை, விளக்குகளை உருவாக்குதல், டயர்கள் விற்பனை மற்றும் படகு ஓட்டுனர் போன்ற பல வேலைகளை செய்தார்.

1930ல் 40 வயது இருக்கும் போது Kentucky பகுதியில் Shell Oil நிறுவனத்தின் உணவகத்தை எடுத்து நடத்தினார். அப்பொழுதுதான் பல மூலிகைகள் மற்றும் மசாலாக்களுடன் சமைக்கப்பட்ட Kentucky Fried Chicken (KFC) சிக்கனை தயாரித்தார். 1956 ல் 105 டாலர்கள் ஓய்வூதியமாக பெற்று அதிலிருந்து விலகினார்.

KFC சிக்கன் உரிமையை உணவகத்திற்கு விற்க முடிவு செய்து, 2 ஆண்டுகள் 1009 முறை நிராகரிப்பிற்கு பிறகு KFC சிக்கன் உரிமையை ஒரு உணவகத்திற்கு விற்றார்.

9 வருடங்களுக்குள் 600 உணவகத்தை KFC தொடங்கியது. 1965 யில் Brown என்பவருக்கு 2 மில்லியன் டொலர் தொகைக்கு KFC நிறுவனத்தை கேணல் சாண்டர்ஸ் விற்றார்.

Kentucky Fried Chicken (KFC) 123 நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகத்தை கொண்டுள்ளது. McDonald’s  பிறகு விற்பனை அளவில் உலகின் இரண்டாவது பெரிய கோர்வையான உணவகம் ஆகும்.

1980 சாண்டர்ஸ் இறக்கும் வரை 2.5 இலட்சம் மையில் அவர் பயணம் செய்ததாக Houston பல்கலைகழகம் கூறுகிறது.

நம்பிக்கைஇ கனவு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு கேணல் சாண்டர்ஸ் வாழ்க்கை பயணம் ஒரு உதாரணம்.

KFC

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்