யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்று ஞாயிற்று கிழமை யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யா கூப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தடை செய்யப்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கி கீழே விழுந்த நிலையில் அருகில் உள்ள வயல் உரிமையாளரான அவரது மகன் தந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் தந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்