மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை சான்றிதழ் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மற்றும் நிகழ்நிலை சேவை என்பன இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய கடமைகளுக்காகத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்