மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளான்.

கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மற்றைய இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்