மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது சரிந்து விழுந்த மரம்

ஹட்டன்- பொகவந்தலாவை வீதியில் வனராஜாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் மரம் சரிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்