மொட்டைமாடியில் தூங்குவதில் பிரச்சனை : மகளை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற தந்தை!
இந்தியாவில் குஜராத் மானிலத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (வயது – 45) என்பவருக்கும் அவரது மகளான சந்தாவுக்கும் இடையே கடந்த 18ஆம் திகதி அன்று இரவு, மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ராமானுஜ் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சந்தா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இவரது மனைவி ரேகாவும் தாக்குதலுக்கு இலக்காகி இரு விரல்கள் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவிட்டு, ராமானுஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்