மே தின விசேட பாதுகாப்பு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் பல முக்கிய அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணிகள் கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன.

கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்