மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து
மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் திங்கட்கிழமை கொழும்பு, கண்டி, நுகேகொடை, பதுளை, நுவரெலியா மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் விசேட மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளன.
வீதியின் ஒரு மருங்கினை மாத்திரம் பயன்படுத்தி பேரணிகளை முன்னெடுக்குமாறு தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பில் மாத்திரம் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3,500க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதாகவும், ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பேரணிகளுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்கும் வகையில், வாகனங்களை தரிப்பது மற்றும் ஏனைய முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்