மேலும் 2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் இரண்டு பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 320 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளையரிசி ஒரு கிலோ கிராமின் விலையை சதொச நிறுவனம் 4 ரூபாவினால் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசியின் புதிய விலை 185 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்