-நானு ஓயாநிருபர்-
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று அதே திசையில் சென்ற காருடன் மோதி எதிர் திசையில் ஹட்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வழியாக நுவரெலியா நோக்கி சென்ற வேனுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்