மட்டக்களப்பு மத்தி வலயத்தில் மூன்று மாடி பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு

-கல்முனை நிருபர்-

மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக்கோட்டத்தின் மீரா பாலிஹா மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை முதல்வர் யூ.எல். மன்சூர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று கட்டடத்தினை திறந்து வைத்தார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் சகல துறைகளிலும் உயர் சித்தி அடைந்த மாணவிகள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் போது கட்டடத்தினை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.