மூன்று நாட்களுக்கு கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி
புனித ரமழான் நோன்புப் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புனித ரமழான் நோன்புப் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை, எதிர்வரும் 11ஆம் திகதி பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதுள்ள விதிமுறைகள், முறையான சுகாதாரப் பாதுகாப்பு முறைகளின்படி, கைதிகளின் உறவினர்களின் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புப் பண்டங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களை மாத்திரம் வழங்குவதற்கு, அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.