
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் குறித்த தொழில் அமைச்சின் வர்த்தமானிக்கு, உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த நீர்வழங்கல் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான்,
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டாலும், இன்னும் ஒரு மாதத்துக்குள் வழக்கு விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
முன்னர் ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், பின்னர் 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும் நாங்களே பெற்றுக் கொடுத்தோம்.
1,700 ரூபாய் சம்பள விடயத்தில் முதல் சுற்றில் நாங்கள் வெற்றிபெற்றோம், இரண்டாம் சுற்றில் கம்பனிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள், மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம்.
ஏனைய தொழிற்சங்கங்கள் இப்போது வெடி வெடித்து கொண்டாடாமல் இருந்தாலே போதும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
