
மூதூர் பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது!
-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நெய்தல் நகர் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 800 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மூதூர் -நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இவ் சுற்றி வளைப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
