மூதூர் பிரதே சபை உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு
-கிண்ண்யா நிருபர்-
மூதூர் சிவில் ஒன்றியத்தின் (MCF) பூர்வாங்க ஏற்பாட்டில் மூதூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இம்முறை சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான ‘Good Governance & Capacity Building’ எனும் கருப்பொருளிலான ஒரு நாள் செயலமர்வு சனிக்கிழமை திருகோணமலை இந்து கலாச்சார கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு, எவ்வாறு மக்களுக்கு பொறுப்பான முறையில் கடமையாற்றுவது, திட்டமிடலுடனான பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்வது மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எவ்வாறு வழங்குவது தொடர்பான வழிகாட்டல் மற்றும் செயற்பாட்டுடனான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சம்மாந்துறை முன்னாள் பிதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌசாத் மற்றும் பிரதம வளவாளராக நடசேன் சுரைஸ் (பணிப்பாளர் – ஊவா சக்தி பவுன்டேஷன்) ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு, மூதூர் சிவில் ஒன்றியத்தின் நிருவாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.