-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னாநகர் பகுதியில் முச்சக்கர வண்டியும்- வேனும் மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கர வண்டி சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேனும் தோப்பூர் -ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியும் இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
