மூதூரில் அன்னையர் தினம்
மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி
திருகோணாமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொன் விழாவை முன்னிட்டும் “அன்னையர் தினத்தை “முன்னிட்டும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியடிச்சோலை இந்து மகளிர் மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வின் ஆசியுரையை விநாயகர் ஆலய குரு வழங்கி வைத்தார். இங்கு சிறந்த சேவைக்காக திருகோணமலை மாவட்ட சமூக செயற்பாட்டாளரும் , சிரேஷ்ட ஊடகவியலாளருமான பொன்.சற்சிவானந்தம் கௌரவிக்கப்பட்டதுடன் பல அன்னையர்களும் கௌரவம் பெற்றனர்.
நிகழ்வில் அறநெறி மாணவர்கள் பெண்களின் கவிதை பாடல்களும் இடம்பெற்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்