
முருகபத்து பாடல்கள் நூல் வெளியீடு
முருகபத்து பாடல்கள் நூல் வெளியீடு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி ஈராள குளம் பகுதியில் குன்றுகள் நிறைந்து காண்ப்படுகின்ற ஆலயமாம் வேலோடு மலை முருகன் ஆலயம் அந்த ஆலயத்தில் நடைபெற்றது.
முருகபத்து பாடல்கள் நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கவிஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது இந்த நூலினை யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்த கவிஞரும் அதிபருமான திருவாளர் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது இதன் முதல் பிரதியினை வேலோடுமலை முருகன் ஆலய தர்மகர்த்தாவும் ஓய்வு பெற்ற அதிபருமான சுப்பிரமணியம் தியாகராஜா அவர்களுடைய துணைவியார் பெற்றுக் கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



