முன்பள்ளி விடுகை நிகழ்வு
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – தோப்பூர் சியா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை அல்ஹம்றா மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் கலந்து சிறப்பித்தார். அத்தோடு பாடசாலைகளின் அதிபர்கள், சமூக சேவையாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்