
-மூதூர் நிருபர்-
திருகோணமலை, கிளிவெட்டி -ஆஷாத்நகர் தாருல் ஹாதி முன்பள்ளிப் பாடசாலையின் சிறுவர் சந்தை இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
முன்பள்ளி ஆசிரியைகள்,நிருவாகத்தினர் இணைந்து சிறுவர் சந்தையினை ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறுவர் சந்தையில் விளையாட்டு உபகரணங்கள், தீன்பண்டங்கள்,மரக்கறி வகையில்,கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டன.
சிறுவர் சந்தையையை பார்வையிட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,கிராம சங்கங்களின் பிரதிநிதிகள்,பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
